News April 24, 2024
நாமக்கல்: சிலம்ப பயிற்சி முகாம்

தமிழர்களின் பாரம்பரிய கலையான, சிலம்பக்கலையை ஊக்குவிக்கும் வகையிலும், அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் வகையில் நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள கந்தசாமி கண்டர் பள்ளி மைதானத்தில் இன்று முதல் தினமும் காலை 6.30 முதல் 8 மணி வரை மாணவ மாணவியர்களுக்கான சிலம்பம் பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது. நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
Similar News
News January 14, 2026
நாமக்கல்-சேலம் சாலையில் பயங்கரம்!

நாமக்கல்-சேலம் சாலை, சாமிநகரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி குருநாதன் (70). இவர் தனது டூவீலரில் சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் குருநாதன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 14, 2026
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பில்லை. பகல் வெப்பம் 82.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும். காற்று கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News January 14, 2026
நாமக்கல்: ரயில்வேயில் வேலை – APPLY NOW

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளமாக Rs.44,900 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <


