News November 19, 2025

ஈரோடு: ரூ.85,000 வரை சம்பளம்.. அரசு வேலை!

image

ஈரோடு மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். யாருக்காவது பயன்படும் அதிகமாக SHARE பண்ணுங்க!

Similar News

News March 11, 2026

ஈரோட்டின் பழமையான பாலத்தை இடிக்க தடை!

image

ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் காளிங்கராயன் வாய்க்காலில் பெரும்பள்ளம் ஓடைக்கு குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டுவதற்காக தொட்டி பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து புராதன சின்னமான நீர்வழி பாலத்தை இடிக்கக்கூடாது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

News March 11, 2026

அறிவித்தது ஈரோடு மாவட்ட நிர்வாகம்! GOOD NEWS

image

தமிழ்நாடு அரசு உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியத்தை ₹50,000-ஆக உயர்த்தியுள்ளது; இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் தகுதியுள்ள உலமாக்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, மார்ச் 13-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வாகனம் வாங்கும் முன்பே விண்ணப்பிப்பது கட்டாயமாகும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை பகிருங்கள் யாருக்காவது பயன்படும்

News March 11, 2026

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (10.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!