News November 19, 2025

திருச்சி: பஸ் ஸ்டாண்டில் லாரி மோதி விபத்து

image

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, மஞ்சள் திடல் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை மீது, துவாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி நிழற்குடைகுள் புகுந்த போது, அங்கு அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் நிற்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேநேரம் அஜாக்கிரதையாக செல்போன் பேசியபடி லாரியை ஓட்டி வந்த டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 28, 2026

திருச்சி – திருவனந்தபுரம் ரயில் ரத்து

image

திருச்சி ரயில்வே ஜங்ஷனிலிருந்து காலை 7:15 மணிக்கு புறப்படும், திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி அதிவிரைவு சிறப்பு ரயில், வரும் 30-ஆம் தேதி ஒரு நாள் மட்டும், திருநெல்வேலி – திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 28, 2026

திருச்சி: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 28, 2026

திருச்சியில் யார் எங்கு போட்டி?

image

அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியலை EPS நேற்று அறிவித்துள்ளார். அதன்படி;
1. திருச்சி கிழக்கு – ராஜசேகரன்,
2. ஸ்ரீரங்கம் – மனோகரன்,
2. திருவெறும்பூர் – ப.குமார்,
3. முசிறி – யோகநாதன்,
4. மணப்பாறை – விஜயகுமார்,
5. துறையூர் – சரோஜா,
6. லால்குடி – லீமாரோஸ்,
7. மண்ணச்சநல்லூர் – பரதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேற்கு தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!