News April 24, 2024
BREAKING நெல்லை: பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர்

திருநெல்வேலி மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் 36வது வார்டு மாமன்ற உறுப்பினராக சின்னதாய் கிருஷ்ணன் உள்ளார். அவர் இன்று (ஏப்.23) தனது மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்க்கு மனு அனுப்பியுள்ளார். அதில், எனது வார்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு மாநகராட்சி உதவி செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News January 17, 2026
நெல்லை: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், நெல்லை மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 17, 2026
நெல்லை: தடுப்பணையில் மூழ்கி இளைஞர் பலி!

அம்பை பகுதையை சேர்ந்தவர் விஷ்வா (23). வேத பாடசாலை மாணவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த 4 பேரும் பூஜைக்காக நேற்று முன்தினம் குமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சென்றனர். நேற்று பூஜைகள் முடிந்ததும் தடுப்பு அணைக்கு சென்று, குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விஷ்வா தண்ணீரில் மூழ்கினார். உடனே அவரை மீட்டு குழித்துறை GH-ல் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
News January 17, 2026
நெல்லை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

களக்காடு அருகே பத்மநேரியை சேர்ந்தவர் ஆறுமுகம் (57). ஓட்டல் தொழிலாளியான இவர் நேற்று முந்தினம் இரவு தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக மின்ஒயர் அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதில் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


