News April 24, 2024
மன்மோகன் சிங் மீது மோடி மீண்டும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கே நாட்டின் வளங்கள் மீது முதல் உரிமை இருப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்ததாக பிரதமர் மோடி மீண்டும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதே குற்றச்சாட்டை மோடி அண்மையில் முன்வைத்தபோது, அதை காங்கிரஸ் மறுத்திருந்தது. இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி எப்போதும் திருப்திபடுத்துதல், வாக்கு வங்கி அரசியலை நினைத்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
Similar News
News November 13, 2025
ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக, திமுகவிற்கு போட்டியா?

ஆதவ் அர்ஜுனா பணத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெக, 2026 தேர்தலில் திமுக vs தவெக இடையேதான் போட்டி என கூறுவது விந்தையிலும் விந்தை என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தலின் போது கூட்டத்தை யார் வேண்டுமானாலும் கூட்டிவிடலாம், ஆட்சிக்கு வர வேண்டும், மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
பிஹார் தேர்தல்: ஆட்டம் காண போகும் பங்குச்சந்தைகள்

பிஹார் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த முடிவுகள் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பிஹாரில் NDA கூட்டணி தோற்றால், மத்தியில் புதிய கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அரசியல் தடுமாற்றத்தால், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி போன்ற முக்கிய குறியீடுகள் 5 முதல் 7% வரை குறுகிய கால சரிவை சந்திக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
News November 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 518 ▶குறள்: வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். ▶பொருள்: ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.


