News April 24, 2024
தற்கொலைக்கு முன் ஷர்மிளா எழுதிய கடிதம்

ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது காதல் கணவர் பிரவீனுடன் வாழ ஆசையாக இருந்தேன். ஆனால், அவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டீர்கள். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நானும் அவன் கூடவே போறேன் என உருக்கமாக கூறியுள்ள ஷர்மிளா, தனது தற்கொலைக்கு பெற்றோரும், சகோதரர்களுமே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 16, 2026
வேலை கேட்டு அலையமாட்டேன்: ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த 8 ஆண்டுகளில் படைப்பாற்றல் இல்லாதவர்களின் கைகளுக்கு (கார்ப்பரேட் நிறுவனங்கள்) இசைத்துறை சென்றுவிட்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதனால் வேலையை கேட்டு எங்கும் அலையமாட்டேன் எனவும், தகுதி மற்றும் திறமையை கொண்டு தனக்கான வேலையை சம்பாதிப்பது தான் எனது நேர்மை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அதுவரை எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
ஜனவரி 16: வரலாற்றில் இன்று

*1945 – 2-ம் உலகப்போரில் தோல்வி அடைந்ததால் ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார். *1991 – அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்ததால், வளைகுடாப் போர் ஆரம்பமானது. *1993 – விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர். *1978 – நடிகர் விஜய் சேதுபதி பிறந்தார்.
News January 16, 2026
போர் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவு எண்கள் அறிவிப்பு

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் மூளும் சூழல் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் கவனமாக செயல்பட அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியர்கள் தேவையில்லாமல் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என கூறியுள்ள தூதரகம், +972-54-7520711, +972-54-3278392 ஆகிய அவசரகால உதவி எண்களையும் அறிவித்துள்ளது.


