News April 24, 2024
தருமபுரி: மாமியார் வீட்டை சேதப்படுத்திய போலீஸ்

தருமபுரி மாவட்டம் கோலம்பட்டியை சேர்ந்த செந்தில் குமார்(40) அசாமில் போலீசாக உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் பாப்பநாயக்கன்வலசை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று(ஏப்.22) மாமனார் வீட்டுக்கு சென்ற செந்தில்குமார் மாமியாருடன் சண்டையிட்டு வீட்டை சேதப்படுத்தி உள்ளார். இது குறித்து அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 21, 2025
விநாயகர் சிலையை நிறுவ விண்ணப்பிக்க வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு, விநாயகர் சிலை நிறுவ விரும்பும் அமைப்புகள் ஆகஸ்ட் 27, 2025 அன்று, முன்கூட்டியே வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
தருமபுரி மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக J. ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி புவனேஸ்வரி, அரூர் கிருஷ்ண லீலா, பென்னாகரம் இளவரசி மற்றும் பாலக்கோடு வீரம்மாள் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்
News August 20, 2025
தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள்

வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். விழாவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.