News April 24, 2024
சித்ரகுப்தர் கோயிலில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு புகழ்பெற்ற காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோயிலில், இன்று(ஏப்.23) உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டிஸ் டி.ராஜு சாமி தரிசனம் செய்தார். அவரை இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் வான்மதி வரவேற்றார். அவருடன் வழக்கறிஞர்கள் தியாகராஜன், ரகுராமன், சம்பத், ஆறுமுகம் ஆகியோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News October 21, 2025
காஞ்சிபுரம்: பட்டு சேலைகளின் விலை உயர்வு!

தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், பட்டுச் சேலைகளின் மூலப்பொருளான ஜரிகை விலை, ஒரே ஆண்டில் கிலோவுக்கு ரூ.50,000 வரை உயர்ந்து, ரூ.1.35 லட்சமாகியுள்ளது. இதனால் சாதாரண பட்டுச் சேலையின் விலை ரூ.10,000-15,000லிருந்து ரூ.20,000 வரை உயர்ந்துள்ளது.இதனால் சாமானியர்களால் வாங்க முடியாத பொருளாக பட்டு சேலை இருக்கிறது. இப்போது விற்பனை பாதிக்கப்பட்டு, நெசவுத் தொழிலுக்குப் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது
News October 21, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டிற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் இன்று அக். 20 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டனர் பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் இதில் வழங்கப்பட்டுள்ளது.