News April 24, 2024
சிறுபான்மை மக்களிடம் மோடி அரசு பாகுபாடு காட்டவில்லை

பிரதமரின் பேச்சு யாருக்கும் எதிரானதல்ல, மக்களுக்கு ஆதரவாகவே அவர் பேசியதாக தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளதையே பிரதமர் பேசுவதாக கூறிய அவர், சிறுபான்மை மக்களிடம் மோடி அரசு பாகுபாடு காட்டவில்லை என்றும் அவர்களையும் ஒருங்கிணைத்தே செயல்படுவதாகத் தெரிவித்தார். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கானப் பாதையில் பாஜக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் பெருமிதம் கூறினார்.
Similar News
News January 6, 2026
செங்கோட்டையன் ஒர் Expired Tablet: வைகைச்செல்வன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் ஒரு ‘காலாவதியான மாத்திரை’ என EX அமைச்சர் வைகைச்செல்வன் சாடியுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்லு, சொல்லு போனவர்களையும், சுகர் மாத்திரை சாப்பிடும் சிலரையும் செங்கோட்டையன் தவெகவில் இணைப்பதால் அக்கட்சிக்கு எவ்வித பலனும் இல்லை என்றார். மேலும், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வந்து இணையும் என உறுதிப்பட தெரிவித்தார்.
News January 6, 2026
பட்டா, சிட்டா ஆவணம்.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

ஆவண எழுத்தர் உதவியின்றி நேரடியாக சொத்து உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யலாம் என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், கூடுதல் செலவுகள் குறையும். சொத்து பத்திரங்களை தயாரிக்க ஆவண எழுத்தர்களையே மக்கள் நாடுகின்றனர். ஆன்லைனில் உள்ள மாதிரி பத்திரங்களின் அடிப்படையில் ஆவணங்களை மக்கள் தயாரித்து கொண்டுவந்தால், அதனை நிராகரிக்காமல் பதிவு செய்யுமாறு சார் பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News January 6, 2026
திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை கட்டாயம்!

ஓமனில் அடுத்த தலைமுறையை காக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி, திருமணம் செய்வதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரத்தசோகை, ஹெபடைட்டீஸ், தலசீமியா உள்ளிட்ட மரபியல் நோய்கள், HIV தொற்றுக்களை முன்கூட்டியே அறியவும், குழந்தைகளுக்கு பரவாமல் தடுக்கவும் இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது போன்ற ஒரு சட்டத்தை கொண்டு வரலாமா? கமெண்ட் பண்ணுங்க.


