News November 19, 2025

மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விவரம்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. நேற்று காலை முதல் மழை குறைந்த காணப்பட்டது. தொடர்ந்து மாலைக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 40.20 மிமீ, செம்பனார்கோவிலில் 35.20 மிமீ, மயிலாடுதுறையில் 30.10மிமீ சீர்காழியில் 23மிமீ மழை பதிவாகியுள்ளது

Similar News

News December 5, 2025

மயிலாடுதுறை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

image

மயிலாடுதுறை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் es<>ervices.tn.gov<<>>.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News December 5, 2025

மயிலாடுதுறை: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர்

image

சீர்காழியைச் சேர்ந்தவர் நீலகண்டன் (65). இவர் 18 வயது இளம் பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நீலகண்டனை கைது செய்தனர்

News December 5, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. தகுதியுடையோர் விண்ணப்பத்தினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு டிச.18ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!