News April 24, 2024
அரக்கோணம் அருகே நிலத்தகராறில் வெட்டு!

அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன்(45). ஆட்டோ ஓட்டுநரான இவரது உறவினர்கள் பாஸ்கரன், கவாஸ்கர், ராஜ்குமார். இந்த இரு குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.22) இரவு பரந்தாமனை பாஸ்கரன் தரப்பினர் கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த பரந்தாமன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா

இராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா இன்று (ஜன.13) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த பொங்கல் திருவிழாவில் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்களுடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்.
News January 13, 2026
ராணிப்பேட்டை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

இராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இன்று (ஜன.13) எதிர்வரும் (ஜன.26) 77 வது குடியரசு தின விழா கொண்டாட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகளை துறை சார்ந்த அலுவலர்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
News January 13, 2026
ராணிப்பேட்டை:ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு கிளிக் செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


