News April 24, 2024
அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர். இதில், காலி குடங்களுடன் சிறுவர்கள் பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் சாலையில் வரிசையாக குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
மணலூர்பேட்டை சம்பவம்; இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்!

மணலூர்பேட்டை கிராமத்தில் நேற்று(ஜன.19) நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின் போது பலூன்களை நிரப்பும் கேஸ்சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் தி.மலையைச் சேர்ந்த கலா என்பவர் பலியானார். மேலும், 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம், சிகிச்சை பெறுவோர் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
News January 20, 2026
மணலூர்பேட்டை விபத்தில் இறந்தவர் புகைப்படம் வெளியானது!

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவின்போது மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகே பலூன்களுக்கு நிரப்பப்படும் சிலிண்டர் வெடித்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கலா என்பவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உயிரிழந்த கலாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் 18 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News January 20, 2026
கள்ளகுறிச்சி: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்! CLICK

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <


