News April 24, 2024

வேலூரில் சுட்டெரிக்கும் சூரியன்: பொதுமக்கள் அவதி

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 22) வெயில் அளவு  106.7°F ஆக பதிவானது. மேலும் வேலூரில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வெளியில் செல்லும்போது குடை, தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை கொண்டுசெல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News September 18, 2025

BREAKING: வேலூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

image

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதனால் கலவகுண்டா நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னை ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மாதாண்டகுப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, கீழ்பாதநல்லூர், தேன்பள்ளி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்க

News September 18, 2025

வேலூரில் அரசு சேவைகளை பெற அலைய வேண்டாம்!

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்.,18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகராட்சி-சுசீ நாடர் திருமண மண்டபம், ஓட்டேரி, 2.குடியாத்தம் நகராட்சிக்கு செங்குந்தர் திருமண மண்டபம், காமாட்சியம்மன் பேட்டை. இங்கு அரசின் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்படுகிறன்றன. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News September 18, 2025

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், இன்று வேலூர் தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் IUCAW, SJHR மற்றும் ACTU போலீசாரின் சார்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சமுதாயத்தில் அனைவரும் சமம் என்பது குறித்தும், வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், போக்சோ சட்டம், மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

error: Content is protected !!