News April 24, 2024

அதிகாலையில் இருவருக்கு கத்தி குத்து : ஒருவர் பலி

image

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடைபெறும் ஆழ்வார்புரம் பகுதியில் இரு இளைஞர்கள் மீது 5பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் திருப்பாச்சியை சேர்ந்த 26 வயது வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து மதுரை மதிச்சியம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News July 6, 2025

அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணை – எஸ்.பி உத்தரவு

image

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் மற்றும் யுவராஜ் ஆகியோர் வழக்கு ஒன்றுக்காக அலங்காநல்லூர் காவல்நிலையம் வந்தபோது, காவலர்களால் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் மாவட்ட காவல்துறை எஸ்.பி உத்தரவின் பேரில் சமயநல்லூர் டி.எஸ்.பி விசாரணை மேற்கொள்வார் என பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

News July 6, 2025

மமக மாநாடு – போக்குவரத்து மாற்றம்

image

பாண்டி கோவிலில் நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டிற்காக மதுரை காவல்துறை போக்குவரத்து ஏற்பாடுகளை அறிவித்துள்ளது. ராமநாதபுரம் சாலை, கோரிப்பாளையம், தத்தனேரி, காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டு, சர்வேயர் காலனி, பொன்னகரம், எஸ்.எஸ். காலனி வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும். இது பொதுமக்களுக்கு தொந்தரவில்லாத பயணத்தை உறுதி செய்யும். இன்று மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 6, 2025

மதுரையில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

மதுரை மக்களே தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு மதுரை மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ- ஸ்கூட்டர் வாங்க உங்களது நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!