News April 24, 2024

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் முதல் சம்பளம்!

image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தான் வழக்கறிஞராக பணியாற்றிய நேரத்தில் முதல் சம்பளமாக ரூ.60 பெற்றதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் பார் கவுன்சில்களில் உறுப்பினராவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த அவர் இதனைக் குறிப்பிட்டார். 1986ஆம் ஆண்டு ஹார்வர்டில் இருந்து திரும்பிய சந்திரசூட், மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது பயிற்சி வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

Similar News

News January 10, 2026

ஜன.1-ம் தேதியை கணக்கிட்டு பணம்: தமிழக அரசு அறிவிப்பு

image

அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) ஜன.1 முதல் அமலுக்கு வருவதாக TN அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாதம் ஊதியத்தில் 50% தொகை TAPS-ஆக வழங்கப்படும். இவ்வாறு 50% TAPS வழங்குவதற்கு அரசு ஊழியர்கள் 10% பங்களிப்பு வழங்க வேண்டும்; மீதமுள்ள 40% நிதியை அரசே ஏற்கும்.

News January 10, 2026

ஊரக பணியாளர்களை அலைக்கழிக்காதீர்: அன்புமணி

image

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து போராடும் ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களுக்கு அன்புமணி ஆதரவு தெரிவித்துள்ளார். தனது X-ல் அவர், ஆண்டுதோறும் பணியை புதுப்பிக்கும் நடைமுறையை அரசு கைவிட்டு, ஊதியத்தை ₹25,000- ₹60,000 வரை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

News January 10, 2026

BREAKING: கனமழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

image

தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் IMD கணித்துள்ளது. அதனால், மீண்டும் குடைக்கு வேலை வந்துவிட்டது நண்பர்களே!

error: Content is protected !!