News April 24, 2024

உடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

image

நாகை அடுத்த வாய்மேடு உடைய அய்யனார் கோயிலில்  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Similar News

News September 26, 2025

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்து விளக்க கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்து அனைத்து துறைகள் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் (செப்.25) நடைபெற்றது. உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மு.கார்த்திகேயன் உள்ளார்.

News September 26, 2025

நாகை: தேர்வு மையத்திற்கு பறக்கும் படை!

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு 13 மையங்களில் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை கண்காணிக்க 13 முதன்மை கண்காணிப்பாளர்கள், 4 சுற்றுக்குழு அலுவலர்கள், 13 ஆய்வு அலுவலர்கள், ஒரு பறக்கும் படை அலுவலர், ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News September 26, 2025

நாகை: கனரா வங்கியில் வேலை!

image

நாகை இளைஞர்களே, டிகிரி முடித்தால் போதும் உங்களாலும் Bank வேலைக்கு போக முடியும். ஆம், மத்திய பொதுத்துறை நிறுவனமான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் விரைவில் நிரப்படவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் வரும் 06.10.2025-க்குள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, Register செய்ய வேண்டும். இதற்கு 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் மறக்காமல் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!