News April 24, 2024
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். தங்கக் குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து, பக்தர்களின் கோவிந்தா!, கோவிந்தா! முழக்கங்களுக்கு இடையே ஆற்றில் எழுந்தருளி அருள் பாலித்தார். பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியதால், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிகளவில் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
Similar News
News January 25, 2026
3 ராசியினருக்கு எச்சரிக்கை

ஜனவரி 16 அன்று மகர ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சி அடைந்திருப்பதால் 3 ராசியினருக்கு சோதனைக் காலம் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். *மிதுனம்: எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு. * கடகம்: காதல் வாழ்க்கையில் மனக்கசப்பு உண்டாகும். நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது கவனம் தேவை. *சிம்மம்: செலவுகள் அதிகரித்து சேமிப்பு குறையும். கடன் வாங்குவதை முடிந்தளவு தவிருங்கள்.
News January 25, 2026
தேர்தலில் போட்டியிடவில்லை: பாஜக MLA சரஸ்வதி

மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏவான சரஸ்வதி, வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே கட்சி பணியில் இருந்து ஒதுங்கி இருக்கும் சரஸ்வதி, மாற்றுக்கட்சியில் இணையப்போவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், தனக்கு 80 வயது ஆகிவிட்டதால், இனி தேர்தல்களில் போட்டியிட போவதில்லை. NDA சார்பில் மொடக்குறிச்சியில் யார் களம் கண்டாலும் தேர்தல் பணி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
EX-LOVER-ன் மனைவிக்கு HIV ரத்தத்தை ஏற்றி பெண் REVENGE

ஆந்திராவின் கர்னூலை சேர்ந்த வசுந்தரா என்பவர், பழிவாங்கும் நோக்கில் EX காதலன் மனைவிக்கு HIV ரத்தத்தை செலுத்திய அதிர வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததை வசுந்தராவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் காதலன் மனைவி பைக்கில் செல்லும்போது திட்டமிட்டே விபத்தை ஏற்படுத்தி, அவருக்கு உதவி செய்வது போல், ஊசி மூலம் HIV ரத்தத்தை செலுத்திவிட்டு வசுந்தரா தப்பியுள்ளார்.


