News April 24, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து
▶குறள் எண்: 10
▶குறள்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
▶பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
Similar News
News January 10, 2026
விஜய் படம் எப்போ வந்தாலும் கொண்டாட்டம்தான்: SK

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். விஜய் படம் எப்போது வெளியானாலும் அன்றைய தினம் கொண்டாட்டம்தான் என்றும் ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்னை கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும் சென்சாரில் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது என்றவர், படம்பார்க்கும் உறுப்பினர்களின் கருத்தை பொறுத்து மாறுபடும் என குறிப்பிட்டார்.
News January 10, 2026
ஸ்லீப்பர் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஸ்லீப்பர் பஸ்களில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய அரசு புதிய விதிகளை விதித்துள்ளது. அதன்படி இனிமேல், ஸ்லீப்பர் பஸ்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் (அ) மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டுமே உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். பஸ்களில் அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களும் பொருத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News January 10, 2026
சச்சின் பொன்மொழிகள்

*நான் என்னை எப்பொழுதும் மற்றொருவருடன் ஒப்பிட்டதில்லை. *எதிரி யாராக இருந்தால் என்ன? முதலில் மோதிப்பார். *உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். ஆனால், குறுக்கு வழியில் இல்லை என்பதை உறுதி செய்யுங்கள். *அனைத்து துறைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். முயற்சியை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள். *தேடல் முடிந்ததும்தான் தேவையை அறிவாய். *துரோகத்தை அன்பினால் வெல்லுங்கள்.


