News April 24, 2024

தலைமுடி உதிர்வை தடுக்கும் ஹெர்பல் ஆயில்!

image

ஐந்து டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாகச் சூடு பண்ணுங்கள். கற்றாழை ஜெல்லை அதில் சேர்த்து சூடானதும் 2 நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணையுங்கள். பின்னர் இக்கலவையை வடிக்கட்டி அப்படியே குளிர விடுங்கள். அதனுடன் வைட்டமின் – இ எண்ணெய் கேப்சூல் ஒன்றை அதில் சேருங்கள். இந்த ஹெர்பல் ஆயிலை வாரத்தில் 2 நாட்கள் தலையில் தடவி, பின்னர் அலசலாம். தலைமுடியில் மாற்றம் தெரிய 2 மாதங்கள் ஆகும்.

Similar News

News January 18, 2026

AUS சுற்றுப்பயண மகளிர் ODI மற்றும் T20 அணிகள்

image

FEB 15-MAR 1 AUS சுற்றுப்பயணத்திற்கான இந்தியா மகளிர் அணி. T20: ஹர்மன்பிரீத் (C), ஸ்மிருதி (VC), ஷபாலி, ரேணுகா, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி, கிராந்தி, சினே, தீப்தி, ரிச்சா(WK), கமலினி(WK), அருந்ததி, அமன்ஜோத், ஜெமிமா, பார்தி, ஸ்ரேயங்கா. ODI: ஹர்மன்பிரீத் (C), ஸ்மிருதி (VC), ஷபாலி, ரேணுகா, ஸ்ரீ சரணி, வைஷ்ணவி, கிராந்தி, சினே, தீப்தி, ரிச்சா (WK), கமலினி (WK), காஷ்வீ, அமன்ஜோத், ஜெமிமா, ஹர்லீன்.

News January 18, 2026

ஜனவரி 18: வரலாற்றில் இன்று

image

*1896-எக்ஸ்ரே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது. *1941-இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் படைகள் இத்தாலிய கிழக்கு ஆப்பிரிக்காவில் போரை தொடங்கியது. *1948-மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மகாத்மா காந்தி தொடங்கிய 121 மணி நேர உண்ணாவிரதத்தை ஜனவரி 18 அன்று முடித்தார். * 1999-பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென்னுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு.

News January 18, 2026

டிரம்ப் குற்றவாளி: கொமேனி

image

ஈரானின் உச்ச தலைவர் கொமேனி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியதாக அமெரிக்க அதிபர் டிரம்பை குற்றவாளி என்று கூறியுள்ளார். போராட்டங்களின் போது, ​​​​இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் தொடர்புடையவர்கள்தான் பெரும் சேதங்களை ஏற்படுத்தி, பல ஆயிரம் பேரைக் கொன்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதற்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கொமேனி எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!