News April 24, 2024
வேலூர் எஸ்.பி. கடும் எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஏப்ரல் 22) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 23 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு ஒரே நாளில் 5 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
வேலூரில் துடிதுடித்து பலி!

வேலூர் சத்துவச்சாரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீஷியன்கள் சுரேஷ் (45) மற்றும் தாமஸ்பெர்லின் மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது. இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். படுகாயமடைந்த தாமஸ்பெர்லின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற லாரி ஓட்டுநரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
News January 28, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன.27) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.