News April 24, 2024
திருவண்ணாமலையில் 105 இடங்களில் அன்னதானம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்கான அனுமதியை திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று வழங்கினார். மொத்தம் 105 இடங்களில் நாளை பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
Similar News
News January 19, 2026
தி.மலை: பட்டப்களில் செயின் பறிப்பு

கண்ணமங்கலம் அருகில் உள்ள முருகாபாடி கிராமத்தில் வசிப்பவர் கனகா(65). இவர் மதிய நேரத்தில் தனது நிலத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுமார் 25 வயது உடைய மர்ம நபர் கனகாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை திடீரெனப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார். அதிர்ச்சியில் கனகா திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிடும் பயனில்லை. புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
News January 19, 2026
தி.மலை: குண்டு வீச்சில் முடித்த பொங்கல் விளையாட்டு!

செய்யாறு தாலுகா பெரும்பாலை கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (28) அங்கு வந்துள்ளார். அவர் அங்கிருந்த இருந்தவர்களிடம் வீண் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் கூட்டத்தின் நடுவே பெட்ரோல் குண்டு வீசியதால் 7 பேர் தீ காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் பாலாஜியை தேடி வருகின்றனர்.
News January 19, 2026
தி.மலை அருகே துடிதுடித்து பலி

செங்கம்–தி.மலை சாலையில் உள்ள சுண்டைக்காய் பாளையம் சந்திப்பு அருகே நடந்த விபத்தில், பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சென்ற மேல் கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேல் (60) மீது பின்னால் வந்த கார் மோதியது. பலத்த காயமடைந்த அவர் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த விபத்தில் குமார் (48) காயமடைந்தார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


