News April 24, 2024
தங்கத்தின் விலை கடும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று கடுமையாக சரிந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் நேற்று 2400 டாலர்களுக்கு விற்கப்பட்ட நிலையில்m இன்று ஒரே நாளில் 2332 டாலர்களாக குறைந்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் தணிந்துள்ளதே தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. சர்வதேச சந்தையின் இந்த விலை வீழ்ச்சி நாளை இந்திய சந்தைகளில் எதிரொலிக்கும்.
Similar News
News January 5, 2026
பந்தலூரில் சிறைபிடித்த மக்கள்

பந்தலூர் சுற்றுவட்டார நீரோடைகளில் மனித கழிவுகளை தொடர்ந்து கொட்டி வந்த இரண்டு டாங்கர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர். சேரம்பாடி அருகே டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகில், மக்கள் மற்றும் வனவிலங்குகள் பயன்படுத்தும் நீரில், உள்ளூர் நபரின் ஆதரவுடன் கழிவு கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து லாரிகளை சிறைபிடித்த மக்கள், சேரம்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.
News January 5, 2026
FLASH: அதிமுகவில் அடுத்த நீக்கம்

கடந்த சில தினங்களாக அதிமுகவில் <<18758135>>அடுத்தடுத்து பதவி பறிப்பு, நீக்கம்<<>> தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இன்று(ஜன.5) திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக EPS அறிவித்துள்ளார். கமாண்டோ பாஸ்கர், தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.