News April 24, 2024
‘கில்லி ‘பட வாய்ப்பை மறுத்த நடிகை

‘கில்லி’ படத்தில் நடிக்க தனக்கு வந்த வாய்ப்பை மறுத்ததாக நடிகை கிரண் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டியில், த்ரிஷா முதலில் இப்படத்தில் நடிக்க மறுத்ததும், எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போது நான் ஒருவரை தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்ததால் இந்த வாய்ப்பை தவறவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு எனக் கூறியுள்ளார். மேலும், அந்தச் சமயத்தில் பல படங்களை தவறவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 11, 2026
PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

இலங்கை தமிழரின் உரிமையை பாதுகாக்க உரிய தூதரக நடவடிக்கையை PM மோடி எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில் அவர் இலங்கை அரசு இனப்பிரச்னையை தீர்க்கும் போர்வையில், ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக சாடியுள்ளார். இது ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்துவதால், அரசியல் சுயாட்சிக்கான தமிழரின் நியாயமான எண்ணங்கள் புறக்கணிக்கப்படலாம் என சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார்.
News January 11, 2026
‘பராசக்தி’ இணையத்தில் கசிந்தது.. படக்குழு அதிர்ச்சி

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ உலகமெங்கும் 1000-க்கும் அதிகமான தியேட்டர்களில் நேற்று வெளியானது. இந்நிலையில், ஒரே நாளிலேயே ‘பராசக்தி’ சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்துள்ளது. சிலமணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் அதை டவுன்லோட் செய்து பார்த்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுமாதிரியான சட்டவிரோத செயலை தவிர்க்கும்படி படக்குழுவும், தியேட்டர் உரிமையாளர்களும் அறிவுறுத்துகின்றனர்.
News January 11, 2026
திமுகவுடன் கூட்டணி.. சற்றுமுன் அறிவித்தார்

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் கொ.ம.தே.க தொடருவதாக கொங்கு ஈஸ்வரன் அறிவித்துள்ளார். மேலும், ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். ஸ்டாலின் நடத்திய ஒன் டூ ஒன் சந்திப்பில், திருச்செங்கோட்டில் கொ.ம.தே.க பதில் திமுகவே போட்டியிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்தனர். இதனால், ஈஸ்வரன் கூட்டணி மாறலாம் என கூறப்பட்ட நிலையில், இவ்வாறு அறிவித்துள்ளார்.


