News April 24, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 19, 2026

‘கம்பவுண்டர்’ ஏன் அந்த பெயர் தெரியுமா?

image

‘டாக்டர் ஆகலன்னா என்ன, கம்பவுண்டர் ஆகலாம்’, 90s கிட்ஸ் அதிகம் கேட்ட டயலாக். ஆனால், கம்பவுண்டர் என்பது வெறும் உதவியாளர் பணி அல்ல. அன்று மருந்துகளில் பிணைப்பு ரசாயனங்கள் இல்லாததால், பல்வேறு மூலக்கூறுகளை சரியான விகிதத்தில் கலந்து (Compounding) மருந்துகளை உருவாக்கினர். இதனாலேயே ‘கம்பவுண்டர்’ என்று பெயர். இதற்கான டிப்ளமோ படிப்புகளும் இருந்தன. நவீன மருந்துகளின் வருகையால் இன்று அந்த பணி மறைந்துவிட்டது.

News January 19, 2026

பாமக எனக்கே சொந்தம்: வழக்கு தொடர்ந்தார் ராமதாஸ்

image

டெல்லி HC வழிகாட்டுதலின் படி, பாமகவுக்கு உரிமை கோரி சென்னை HC-ல், ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். கூட்டணி தொடர்பாக வேறும் யாரும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் அது செல்லாது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடி, சின்னமும் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 19, 2026

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது பாஜக: தமிழிசை

image

ஜல்​லிக்​கட்டை ‘காட்​டுமி​ராண்​டி விளையாட்டு’ என்ற காங்​கிரஸுடன் திமுக கூட்​டணி வைத்​துள்​ளது என தமிழிசை விமர்சித்துள்ளார். பாஜக அரசு​தான் தடையை நீக்கி ஜல்​லிக்​கட்டை மீட்​டெடுத்ததாக கூறிய அவர், ஆனால் அதை தற்​போது திமுக​வின் விழா​வாக மாற்​றி​விட்​டனர் எனவும் கூறியுள்ளார். மேலும்,
ஜல்​லிக்​கட்டு வீரர்​களுக்கு அரசு வேலை வழங்​கு​வது வரவேற்​கத்​தக்​கது என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!