News November 19, 2025
ஊளையிடும் நரிக்கு பதில் சொல்ல வேண்டுமா? வைகோ

பல நூறு கோடி சொத்துகளை வைகோ குவித்து விட்டதாக மதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட மல்லை சத்யா குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த வைகோ, செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன் நான். அரசியலுக்கு வந்து பல சொத்துக்களை இழந்திருக்கிறேன். புனித இலக்கை நோக்கிய நெடுந்தூர பயணத்தில் இருக்கிறேன். அப்போது, ஒரு நரி ஊளையிட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்
Similar News
News November 19, 2025
சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.19) கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, வரும் நாள்களில் வெள்ளியின் விலையில் கணிசமான ஏற்றம் இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
News November 19, 2025
கண்களை பாதுகாக்கும் 7 நட்ஸ் & உலர் பழங்கள்!

இன்றைய சூழலில் அனைவரும் செல்போன், கம்யூட்டர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்நிலையில், அதற்கு இடம் கொடுக்காமல் கண்களை பாதுகாக்க, பார்வை திறனை மேம்படுத்த இந்த 7 நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் உட்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே SWIPE பண்ணுங்க.
News November 19, 2025
FLASH: சென்னை ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஏர்போர்ட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிராங்க்பர்ட், துபாய், கோலாலம்பூர் விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.


