News November 19, 2025
சென்னையில் ED ரெய்டு; காலையில் அதிரடி!

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள நிறுவனங்கள் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிகள் மற்றும் புறநகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக நேற்று காலை 8:30 முதல் இன்று (நவ.19) காலை 6:30 மணி வரை அயனாவரம் 34, எழும்பூர் 26.2, கிண்டி 15, மாம்பலம் 26.2, மயிலாப்பூர் 11.4, பெரம்பூர் 54.3, புரசைவாக்கம் 28.8, தண்டையார்பேட்டை 52.6, ஆலந்தூர் 11.6, அம்பத்தூர் 27, சோழிங்கநல்லூர் 12.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
News November 19, 2025
சென்னை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

சென்னை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
சென்னையில் இரண்டு நாள் அகர்பத்தி தயாரிப்பு பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் அகர்பத்தி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி ஈக்காட்டுத்தாங்கல் EDII-TN வளாகத்தில் வரும் 25,26 தேதிகளில் காலை 10 முதல் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. இதில் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், முன்பதிவு கட்டாயம். www.editn.in அல்லது 9360221280/9840114680 விண்ணப்பிக்கலாம்.


