News November 19, 2025

கூடலூர் நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு பிடிவாரன்ட்

image

கூடலுார் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்பட்ட குளறுபடிகள், பாதிப்பிற்கு தீர்வு வழங்க வலியுறுத்தி ஒப்பந்ததாரர் மலைச்சாமி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தார். நீதிமன்றத்தில் நேற்று (நவ.18) ஆஜராக நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News November 19, 2025

தேனி: மலை சாலையில் மண்சரிவு அபாயம்

image

தமிழக – கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக குமுளி மலைச்சாலை உள்ளது. இந்த வழியாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சபரிமலைக்கு செல்கின்றன. இந்த மலைச்சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

News November 19, 2025

தேனி: இலவச பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் தகவல்

image

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி 2 மற்றும் 2A முதன்மைத் தேர்விற்கு தயராகும் விண்ணப்பதாரர்கள் நேரடி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 63792 68661 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

News November 19, 2025

தேனி ராணுவத்தில் சேர வாய்ப்பு – கலெக்டர் தகவல்

image

தேனி: இந்திய ராணுவ பயிற்சி நிலையம் சார்பில் குளிர்கால ராணுவ விளையாட்டுகளின் ட்ரையல்ஸ் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நவ.25 – 29 வரை நடைபெறுகிறது. இதில் தேர்வாகும் நபர்கள் இந்திய ராணுவத்தில் நேரடியாக நைப் சுபேதார், அவில்தார் பதவி நிலைகளில் பணியாற்றலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தகவல். ஷேர்பண்ணுங்க

error: Content is protected !!