News April 24, 2024

மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு

image

பாடியநல்லூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சங்கர் கோவிந்தம்மாள் தம்பதியரின் மகன் சிவா (வயது 7). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் அருகிலுள்ள மருந்தகத்தில் சிறுவனுக்கு மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சிறுவனுக்கு மீண்டும் காய்ச்சல் அதிகமாகி வீட்டிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News August 20, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (20/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News August 20, 2025

திருவள்ளூர் மக்களே இங்கு குளித்தால் பாவம் நீங்கும்

image

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் 1000 வருட ஜெகந்நாதபெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பிருகு தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இங்கு சிறப்பு பூஜை செய்தால் படிப்பறிவு, அரசு வேலை, வெளிநாட்டு வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 20, 2025

திருவள்ளூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். * பகிருங்கள்* <<17461696>>விபரங்களுக்கு CLICK HERE<<>>

error: Content is protected !!