News April 24, 2024

சொந்த மண்ணில் பழி தீர்க்குமா சென்னை அணி?

image

லக்னோவிடம் அடைந்த தோல்விக்கு சொந்த மண்ணில் சிஎஸ்கே பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை அணி, லக்னோவை சேப்பாக்கத்தில் நாளை எதிர்கொள்ள உள்ளது. ஏற்கெனவே சென்னை, லக்னோவிடம் தோல்வி அடைந்த நிலையில், இந்த போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது சென்னை அணிக்கு எளிதாகும். நடப்பு தொடரில் இந்த இரு அணிகளுமே 7 போட்டியில் விளையாடி 3 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

Similar News

News January 23, 2026

தஞ்சை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

தஞ்சை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

அரசியலில் களமிறங்குகிறாரா மாரி செல்வராஜ்?

image

பட்டியலின மக்களின் வாழ்வியலை படமாக இயக்கிவரும் மாரி செல்வராஜுக்கு அவர் சார்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் மத்தியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தென்மாவட்டங்களில் அச்சமூக வாக்கை பலப்படுத்தும் நோக்கில் மாரியை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம் விஜய்க்கு செல்லும் கணிசமான வாக்குகளும் தங்கள் பக்கம் திரும்பும் என திமுக நம்புகிறதாம்.

News January 23, 2026

தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் ₹20,000 மாறியது

image

தங்கம் விலை உயர்வை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று (ஜன.23) உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹20 அதிகரித்து ₹360-க்கும், கிலோ வெள்ளி ₹20,000 உயர்ந்து ₹3.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. நாளுக்கு நாள் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துகொண்டே வருவதால், நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு சாதகமாக உள்ளது.

error: Content is protected !!