News April 24, 2024

கரூர்: வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

image

கரூர் மண்மங்கலம் குமாரசாமி கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் 24 மணி நேரமும் கண்காணிக்க, துப்பாக்கி ஏந்திய வீரர்கள் குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள “ஸ்ட்ராங் ரூம்” என்னும் அறைக்கு சென்று, முறையாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறதா என ஆய்வு செய்தார்.

Similar News

News January 12, 2026

கரூர்: ARMY-ல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு BE., B.tech முடித்தவர்கள் 05.02.2026-க்குள் லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இப்பணிக்கு தேர்வு கிடையாது. நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். (SHARE)

News January 12, 2026

வாங்கல் அருகே விபத்து

image

கரூர், வாங்கல் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் நேற்று தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக் நிலைதடுமாறி அருகிலிருந்த வீட்டின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

கரூரில் அருகே விபத்து: இளைஞர் பலி

image

கரூர் அருகே பைக்கில் சென்ற பிரகாஷ் (26) என்பவர், முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றிமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!