News April 24, 2024
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு ஏன்?

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுகவுக்கு வாக்களிக்காத பெண்ணை திமுகவினர் அடித்தே கொன்றுவிட்டதாக அண்ணாமலை X தளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அப்பெண் முன் பகை காரணமாகவே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் மீது வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 4, 2026
தமிழ் இசையமைப்பாளர் காலமானார்.. குவியும் அஞ்சலி

‘பூவுக்குள் பூகம்பம்’ படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ் (எ) சங்கீத ராஜன் (70) காலமானார். ‘முனி’, ’சினேகிதி’ உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைத்த இவர், கடந்த சில நாள்களாக நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று போரூர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
News February 4, 2026
ஆதார் மிஸ் யூஸ் ஆகியிருக்கா? ஈஸியா பார்க்கலாம்!

ஆதார் பாதுகாப்பிற்காக ‘Authentication History’ என்ற வசதியை UIDAI வழங்குகிறது. இதன்மூலம், கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இதற்கு, UIDAI தளத்தின் ‘My Aadhaar’ பகுதிக்கு சென்று Authentication History-ஐ தேர்ந்தெடுக்கவும். அதில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால், உடனடியாக புகாரளிக்கவும். ஆதார் பாதுகாப்பை சரிபார்க்க இது சிறந்த வழி.
News February 4, 2026
பண மழை கொட்டும் 5 ராசிகள்

இன்னும் 2 நாள்களில் நவபஞ்ச யோகம் உருவாகிறது. இதனால், 5 ராசிகளின் வாழ்க்கையில் பல மாற்றங்களும் நல்ல விஷயங்களும் நடக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. *மேஷம்-ராஜயோகத்தால் தொழிலில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். *மிதுனம்-நிதிநிலை மேம்படும். *சிம்மம்-பணியிடத்தில் புகழ், வெற்றி, ஊதிய உயர்வு கிடைக்கும். *துலாம்-குருவின் பார்வையால் வருமானம் அதிகரிக்கும். *கும்பம்-நகை, வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.


