News November 18, 2025
இள வயதிலேயே முகச் சுருக்கம் வந்துருச்சா? Solution!

இள வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட மன அழுத்தம், தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கிறது. இதை சரி செய்யவே முடியாதா என நீங்கள் வருந்தவேண்டாம். ▶இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லை கொண்டு 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள் ▶வாழைப்பழம் / பப்பாளி சாறை முகத்தில் தடவலாம் ▶தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவுவது சிறந்தது ▶மன அழுத்தத்தை குறைப்பதும் அவசியம். பலருக்கு உதவும் SHARE THIS.
Similar News
News November 19, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 19, 2025
மீண்டும் தலைமை பொறுப்பில் ஜெஃப் பெசோஸ்

Project Prometheus என்ற புதிய AI நிறுவனத்தின் இணை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸ் பொறுப்பேற்றுள்ளார். 6.2 பில்லியன் டாலர் நிதியில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், ரோபாட்டிக்ஸ் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கான AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது தனது Blue origin நிறுவனத்தின் விண்வெளி ஆய்வுகளுக்கு உதவும் என்று ஜெஃப் பெசோஸ் நம்புவதாகவும் கூறப்படுகிறது.
News November 19, 2025
இதெல்லாம் நாங்க அப்பவே பண்ணிட்டோம்..!

ராஜமௌலியின் ‘வாரணாசி’ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், அண்மையில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில் கிராபிக்ஸ் நன்றாக இல்லை என SM-ல் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கிராபிக்ஸ் காளையில் மகேஷ் பாபு வரும் காட்சியை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், இதெல்லாம் கமல் 1997-ல் (மருதநாயகம்) ஒரிஜினலாகவே செய்துவிட்டதாக குறிப்பிடுகின்றனர். உங்களுக்கு ‘வாரணாசி’ கிளிம்ப்ஸ் பிடிச்சிருந்ததா?


