News April 24, 2024
சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கிறதா என ஆய்வு
கோவை மக்களவைத் தொகுதியில் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். கட்டுபாட்டு அறைக்கு சென்ற அவர் சிசிடிவி கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.
Similar News
News November 20, 2024
துக்க வீட்டில் தீ: பலி 3 ஆக உயர்வு
கோவை: கணபதி பகுதியில் துக்க வீட்டில் தீப்பிடித்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கோவையில் நவ.16ஆம் தேதி துக்க வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் ராமலட்சுமி, பானுமதி ஆகியோர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரன்(50) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News November 20, 2024
நேரு கல்விக் குழுமம் ரூ.4 கோடி சொத்து வரி பாக்கி
திருமலையாம்பாளையத்தில் செயல்படும் நேரு கல்விக் குழுமத்தின் கீழ் இரண்டு பொறியியல் கல்லூரி, ஒரு கலை அறிவியல் கல்லூரி, ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் பள்ளி ஆகியவை செயல்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக ரூ.4 கோடி பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருப்பதால், புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
News November 20, 2024
கோவை சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகின்ற சமூக நலத்துறை அதிகாரிகள் இன்று கூறியதாவது: சமூக நலத்துறையின்கீழ் இயங்கி வருகின்ற சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பன்முக பணியாளர் என மூன்று இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள வகுப்பு அல்லது டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.