News April 24, 2024

சேலம் மண்டலத்தில் ரூ.54 கோடிக்கு மது விற்பனை

image

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 17,18,19 என தொடர்ந்து 3 நாள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு, 20ம் தேதியான சனிக்கிழமை அன்று கடைகள் திறக்கப்பட்டன. 3 நாள் விடுமுறை அடுத்து கடை திறந்ததால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் 20ம் தேதி ஒரே நாளில் ரூ.54 கோடியே 88 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.

Similar News

News January 13, 2026

சேலம் அருகே கூண்டோடு விலகிய நிர்வாகிகள்!

image

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியம், கணவாய்புதூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜாலிகொட்டாய் பகுதியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியக் கலந்தாய்வு மற்றும் இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் தவெவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களைத் தவெக நிர்வாகிகள் துண்டு அணிந்து வரவேற்றனர்.

News January 13, 2026

சேலத்தில் ஷாக்: ஆசனவாயில் காற்று செலுத்திய வாலிபர்

image

சேலம் அம்மாபேட்டை தறிப்பட்டறையில் பணியாற்றும் ஒடிசா வாலிபர் சுசான்தாஸ் (26), நேற்று இயந்திரம் சுத்தம் செய்யும் ஏர்டியூப் மூலம் விளையாட்டுத்தனமாகத் தனது ஆசனவாயில் காற்றைச் செலுத்தியுள்ளார். இதனால் அவரது வயிற்றில் காற்று வேகமாக புகுந்து, பெரிதாகி வீக்கமடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

News January 13, 2026

கத்தியை காட்டி பொங்கல் போனஸ் கேட்ட நபர்

image

சேலம் குள்ளம்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாஸ்கர் காரியப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் வாழப்பாடி சேர்ந்த கந்தசாமி என்பவர் தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி பொங்கல் போனஸ் கேட்டதாகவும் தர மறுத்ததால் கொலை செய்வதாக மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூபாய் 300ஐ பறித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணை மேற்கொண்ட போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்

error: Content is protected !!