News April 24, 2024
தூத்துக்குடி: கலெக்டர் கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கோடை வெயிலின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருப்பதோடு நண்பகல் வேளையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தனியாக படுக்கை ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒஎஸ்ஆர் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
கீழஈராலில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கீழ ஈராலில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் ஏப்.22 அன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வங்கி, காப்பீட்டு நிறுவனம், மென்பொருள் நிறுவனம் கலந்து கொள்ள இந்த முகாமில் 10 முதல் டிகிரி படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு 9442961164.7812877818 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
பூண்டி வெள்ளிங்கிரி மலையில் தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு.

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் கோவைப்பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு கடந்த பிப்.மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு தூத்துக்குடி சமீர் நகரை சேர்ந்த இளைஞர் புவனேஸ்வரன் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். நேற்றிரவு கிரி மலை அருகே இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஆலந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 19, 2025
தூத்துக்குடியில் சுற்றி பார்க்க வேண்டிய 10 இடங்கள்

▶️திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
▶️மணப்பாடு கடற்கரை
▶️தேரிக்காடு
▶️தூய பனிமய மாதா பேராலயம்
▶️கழுகுமலை வெட்டுவான் கோயில்
▶️வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை
▶️வெளிமான் காப்பகம்
▶️மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மணி மண்டபம்
▶️மயூர தோட்டம்
▶️உப்பளம்