News April 24, 2024

புதுச்சேரி: தடுத்தவருக்கு கழுத்தில் கத்தி குத்து

image

காரைக்கால் அடுத்த குரும்பகரம் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், அவரது தாய்
மல்லிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பக்கத்து வீட்டில்
வசிக்கும் சந்திரபாபு என்பவர் ஏன் தாயிடம் சண்டை போடுகிறாய் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கலையரசன் சந்திரபாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் கலையரசனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 17, 2026

புதுச்சேரி கடற்கரையில் கலை நிகழ்ச்சிகள் அறிவிப்பு

image

புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று (ஜன.17) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதில் மெல்லிசை இசை, பறையாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம், மல்லர் கம்பம், வாத்திய இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

புதுச்சேரியில் விடுமுறை அறிவிப்பு!

image

சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், இன்று (ஜன.17) 3வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் இயங்க வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி வங்கி ஊழியர்களுக்கும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ள வங்கிகள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

புதுவையில் ஆண்களுக்கான பொங்கல் விழா!

image

புதுவை மாநிலம் வானூர் அருகே அமைந்துள்ள வீரனார் கோயிலில், ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில் பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பானைகளை ஊர்வலமாக எடுத்து வந்து குளக்கரையில் பொங்கல் வைத்தனர். பின்பு பொங்கலை படையலிட்டு ஆண்கள் மட்டுமே உண்டனர். இப்பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

error: Content is protected !!