News November 18, 2025
புதுச்சேரியில் பேனர் வைக்க தடை

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரியில், பொதுஇடங்களில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்க பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு வரும் டிச.14ம் தேதிவரை அமலில் இருக்கும். இந்த தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என கூறியுள்ளார்
Similar News
News November 18, 2025
புதுவை: மருத்துவ படிப்பிற்கான பட்டியல் வெளியீடு!

புதுவை சென்டாக் இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவம், ஆயுர்வேதம் 47 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் 73 பேரும், பல்மருத்துவம், ஆயுர்வேதம் & கால்நடை மருத்துவம் 130 பேரும் இடம் பெற்றனர். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று (நவ.18) தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 47.6 மி.மீ. மழை பொழிவு

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரி நகரப்பகுதியில் உப்பளம், ரெட்டியார் பாளையம், உருளையன்பேட்டை, நெல்லிதோப்பில் கனமழை பெய்தது. நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 47.6 மி.மீ., (4.76 செ.மீ.) மழை பதிவானது.