News April 24, 2024

குடியாத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

image

குடியாத்தம் ஒன்றியம், சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் குடியாத்தம்-பலமனேரி சாலையை மறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த தீடீர் போராட்டத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Similar News

News April 20, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (ஏப்ரல் 19) நடத்திய சோதனையில் 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.

News April 19, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 19) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 19, 2025

வேலூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஐந்தாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!