News November 18, 2025
நயன்தாராவின் சொத்து இவ்வளவு கோடியா?

நடிகை நயன்தாரா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவை தாண்டி, பல தொழில்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். 9Skin, Femi9, The Lip Balm Comapany, Rowdy Pictures போன்ற நிறுவனங்களை அவர் தொடங்கி நடத்தி வருகிறார். இதுதவிர, Chai Waale, UAE-ல் எண்ணெய் வணிகம், Ticket9 போன்ற நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் ₹200 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
தேர்தல் தோல்வி… மவுன விரதம் இருக்கும் PK

பிஹார் தேர்தல் தோல்வி எதிரொலியாக, நவ.20-ல், காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருக்கப் போவதாக ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பல கனவுகளுடன் அரசியலுக்கு வந்த JSP வேட்பாளர்களின் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும், இந்த ஒருநாள் மவுன விரதம், தன்னை சுய பரிசோதனை செய்ய உதவும் எனவும் அவர் கூறியுள்ளார். 238 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட ஜன் சுராஜ், ஒன்றில் கூட வெல்லவில்லை.

நீண்ட காலம் பதவியில் இருந்த 10 முதல்வர்கள்

இந்தியாவில், சில அரசியல் தலைவர்கள் நீண்ட காலம் முதலமைச்சர்களாக பதவியில் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோனோர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும், இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர்கள் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், எத்தனை வருடம் முதலமைச்சராக பணியாற்றி உள்ளனர் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE