News April 24, 2024

ஸ்ரீபெரும்புதூர் : 10 பேர் மீது வழக்கு

image

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் வாக்குப்பதிவை முழுவதுமாக புறக்கணித்தனர். ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் மக்களை வாக்களிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் 10 பேருடன் கிராம மக்கள் காவல் நிலையத்தில் ஆஜராகினர்.

Similar News

News January 18, 2026

காஞ்சிபுரம்: சீட்டு மோசடியில் காசு போச்சா? கவலை வேண்டாம்!

image

காஞ்சி மக்களே, சீட்டு நடத்தி ஏமாற்றுபவர்களிடம் பணத்தை இழந்தால், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம். இழந்த தொகை மற்றும் ஏமாற்றப்பட்ட விதம் குறித்துப் புகாரில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சட்ட ரீதியான தீர்வுகளுக்கு வழக்கறிஞரை அணுகுவது சிறந்தது. இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

News January 18, 2026

காஞ்சி மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல் உறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை ஜனவரி.19, காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெறும், என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News January 18, 2026

காஞ்சிபுரத்தில் வினோத பூஜை!

image

காஞ்சிபுரம், சாத்தணஞ்சேரி கிராம இருளர் இன மக்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்ல பாம்பைப் பிடித்து வந்து வழிபடும் வினோத மரபைக் கடைபிடிக்கின்றனர். மக்கள் பாம்பிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, கற்பூர ஆரத்தி காட்டி வணங்குகின்றனர். பின்னர், பாம்பைக் கொண்டு வந்தவர்களுக்குக் காணிக்கை வழங்கிப் பாராட்டும் கிராமத்தினர், வழிபாட்டிற்குப் பின் அந்தப் பாம்பைப் வனப்பகுதியில் கொண்டு சென்று விடுகின்றனர்.

error: Content is protected !!