News April 24, 2024

கோவை: மலையேறும் பக்தர்களுக்கு வேண்டுகோள்

image

வெள்ளியங்கிரி வனதுறையினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள், வனத்துறை அனுமதித்த பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும். மாற்று பாதைகளில் செல்லக்கூடாது. மலையேறும் பக்தர்கள் வனவிலங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது. மேலும் இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுத்திணறல் பரிசோதனை செய்த பின்னரே மலையேறுவதற்கு அனுமதிப்படுவர் என வனத்துறை கூறியுள்ளது.

Similar News

News January 16, 2026

கோவை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

கோவையில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 16, 2026

தன்பாத்-கோவை வாராந்திர ரயில்கள் திடீர் ரத்து

image

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை கோவைக்கு இயக்கப்பட்டு வந்த தன்பாத்-கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த ரயில் சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

News January 16, 2026

கோவை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம் <<>>மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு(0422-2449550) அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!