News November 18, 2025
அரியலூர்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்

அரியலூர் மாவட்டம், குண்டவெளி அடுத்துள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உட்பட்ட நெல்லித்தோப்பு பெட்ரோல் பங்க் எதிரே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
அரியலூரில் போதை ஒழிப்பு உறுதி மொழி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க, அரசு அதிகாரிகள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள், பிற துறை சார்ந்த அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது.

அரியலூர் கோவிலில் உண்டியல் கொள்ளை

அரியலூர் மாவட்டம், வீ.கைகாட்டி தேசிய நெடுஞ்சாலையின் அருகில் ஸ்ரீபாலமுருகன் ஆலயத்தில் இருந்த இரண்டு உண்டியல்களை கொள்ளையர்கள், தரையை பெயர்த்து திருடி சென்றனர். இதனையடுத்து அருகில் உள்ள ஓடையில் உண்டியலில் இருந்த 40,000 பணத்தை கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு, உண்டியலை ஓடைப்பகுதியில் அங்கேயே விட்டு சென்றனர். மேலும் இச்சம்பவம்
குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .