News April 24, 2024
கடலூர்: மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்!

கடலூரில் கடந்த 1 மாதமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பேருந்து நிறுத்தம், செம்மண்டலம் சிக்னல் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடலூர் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பானையில் வைத்திருக்கும் தண்ணீரை பருகி தாகத்தை தீர்த்து செல்கின்றனர்.
Similar News
News January 12, 2026
கடலூர்: மனித கறி கேட்டு ஓட்டலில் ரகளை

கடலூர், பொன்னேரியில் தினேஷ் (26) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அங்கு 7 வாலிபர்கள் சாப்பிட வந்தனர். மது போதையில் இருந்த அவர்களிடம் ஓட்டல் ஊழியர், சாப்பிட என்ன வேண்டும் என கேட்டார். அதற்கு அவர்கள் மனித கறி வேண்டும் என்று கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், கவியரசன் (24), பிரசாந்த் (19), ஸ்ரீகாந்த் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.
News January 12, 2026
கடலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில், ஏரிகளின் மீன்பிடி உரிமையினை குத்தகைக்கு விட ஏதுவாக, மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன என, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள 30 ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக 21.1.2026 முதல் https://www.tntenders.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 12, 2026
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.12) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


