News November 18, 2025
செயல்படாமல் இருக்கும் OPS அலுவலகம்: பிரேமலதா

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரசாரத்தின் ஒருபகுதியாக தேனியில் பிரேமலதா பரப்புரை மேற்கொண்டார். அப்போது, போடி MLA அலுவலகம் 15 ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதாக ஓபிஎஸ்சை விமர்சித்தார். போடி தொகுதியில் தேமுதிக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற்று வந்த உடன், மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம் என உறுதியளித்தார். ஓபிஎஸ்சை பிரேமலதா நேரடியாக இவ்வாறு அட்டாக் செய்வது இதுதான் முதல்முறை.
Similar News
News November 18, 2025
அதிமுகவையும் திமுகதான் காப்பாற்றணும்: மருது அழகுராஜ்

எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இப்போது இல்லை என மருது அழகுராஜ் கூறியுள்ளார். இப்போதிருக்கும் அதிமுக சில சமூகங்கள் சேர்ந்த சாதி அமைப்பாக மாறிவிட்டது என்ற அவர், சகோதர இயக்கமான அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். இதனால்தான் அதிமுகவை விட்டு வந்துவிட்டோமே என்ற வருத்தம் தனக்கு துளியும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் வீட்டின் அருகே ஆண் சடலம்

சென்னையில் உள்ள கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே முகத்தில் செலோடேப் சுற்றியபடி இளைஞர் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் கிடந்த பையில் இருந்த ஆவணங்களின் மூலம் இறந்து கிடந்தவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசன் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.