News April 24, 2024
செந்தில் பாலாஜியிடம் அசல் ஆவணங்கள் ஒப்படைப்பு

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியிடம் வழக்கு தொடர்பான அசல் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. பண மோசடி வழக்கில் ED செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14இல் கைது செய்தது. இந்த வழக்கில் அசல் ஆவணங்களை செந்தில் பாலாஜி கோரியிருந்த நிலையில், இன்று அவரிடம் ஆவணங்கள் வழங்கப்பட்டன. மேலும், 34ஆவது முறையாக அவரின் நீதிமன்றக் காவல் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவான அறுவடை திருநாளை பொங்கல் வைத்து வரவேற்க சிறப்பு நேரங்கள் உள்ளன. அதன்படி, சூரிய பொங்கல் வைக்க உகந்த நேரம் அதிகாலை 4:30 மணி முதல் காலை 6 மணி வரையாகும். இந்த நேரத்தில் வைக்க முடியாதவர்கள் காலை 7:45 முதல் 8:45 வரை அல்லது 10:35 முதல் 11:30-க்குள் வைக்கலாம். அனைவரது இல்லங்களிலும் அன்பு, இன்பம் பொங்க Way2News சார்பாக வாழ்த்துகிறோம். #பொங்கலோ பொங்கல்.
News January 15, 2026
PM மோடியின் மதுரை பொதுக்கூட்டத்தை தடுத்த EPS

மதுரையில் வரும் 23-ம் தேதி PM மோடி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் திடீரென மதுராந்தகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு EPS தான் காரணம் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திருப்பரங்குன்றத்தில் PM மோடி தரிசனம் செய்வதாக இருந்தது. இதனால், சிறுபான்மையினரிடம் ADMK-க்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் போய்விடும் என EPS தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
News January 15, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 15, தை 1 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 1:00 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: துவாதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.


