News November 18, 2025
தஞ்சை: 2 பள்ளி மாணவிகளை ஏமாற்றி திருமணம்!

கும்பகோணத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (24). அவர் பள்ளி மாணவி ஒருவரை காதலித்து திரும ணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைப்போல மற்றொரு மாணவியையும் ஏமாற்றி சரண்ராஜ் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரில் 2 போக்சோ வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் சரண்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
Similar News
News November 18, 2025
தஞ்சை: செயின் பறிக்க முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தனியார் கிளினிக்கில் பணிபுரியும் செல்வி(35) என்பவர் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ஒரத்தநாடு போலீசார் நடத்திய விசாரணையில், திருட முயன்றது அப்துல்கனி(31) என்பது தெரியவந்தது. செல்வி அளித்த புகாரின் பேரில், அப்துல்கனியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தஞ்சை மாவட்டத்திற்கு இன்று மஞ்சல் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.18) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.