News November 18, 2025

திருச்செங்கோட்டில் விஷம் குடித்து சாவு!

image

திருச்செங்கோடு ராஜாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரன் (60), இரண்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மகனும் இறந்ததால் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் 16ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News November 18, 2025

நாமக்கல்: வீட்டில் பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) நாமக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

குமாரபாளையம்: லாரி பேட்டரிகளை திருடியவர் கைது

image

குமாரபாளையம் அருகே கவுண்டனூர் ஜெகதீஸ் (41) சொந்த லாரி பேட்டரிகளை பரிசோதிக்க சென்ற போது, 2 பேட்டரிகள் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதை கண்டார். உறவினர்களுடன் துரத்தி பிடித்தார். விசாரணையில், ராசிபுரத்தானூர் முருகேசன் மகன் தீபன் (23) என தெரியவந்தார். பேட்டரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு வெப்படை காவல்துறையினர் தீபன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!