News April 24, 2024

நைட் பார்ட்டிகளில் பங்கேற்றால் எப்படி சாம்பியனாவது?

image

நைட் பார்ட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதால் அவர்களின் ஆட்டத்திறன் குறைவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். பல வீரர்கள் நைட் பார்ட்டிகளில் பங்கேற்றுவிட்டு, அடுத்த நாள் நேரடியாக போட்டிகளில் பங்கேற்கிறார்கள். பல அணிகள் ஐபிஎல் சாம்பியன் ஆகாமல் இருப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர், இதை வீரர்கள் குறைத்துக் கொண்டால் மட்டுமே முழுமையான திறனை வெளிப்படுத்த முடியும் என்றார்.

Similar News

News January 17, 2026

எம்ஜிஆர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

image

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில், இன்று கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கள்ளக்குறிச்சி MLA செந்தில் குமார் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி எம்ஜிஆர் புகழ் பாடும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

News January 17, 2026

தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹4,000 மாற்றம்

image

தங்கம் சவரனுக்கு ₹400 அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் இன்று(ஜன.17) கிலோவுக்கு ₹4,000 அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விலையில் 1 கிராம் வெள்ளி ₹310-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹3,10,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ்(28) 2 டாலர்கள் குறைந்துள்ள போதிலும், இந்திய சந்தையில் வெள்ளி விலை உயர்வைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 17, 2026

விஜய்க்கு மக்கள் ஆதரவு எவ்வளவு? காங்., ரகசிய சர்வே!

image

விஜய்க்கு மக்கள் செல்வாக்கு எவ்வளவு இருக்கிறது என காங்., ரகசிய சர்வே எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில், 100-ல் 61 பேர் தவெகவிற்கும், 23 பேர் திமுக கூட்டணிக்கும், 15 பேர் அதிமுக கூட்டணிக்கும் வாக்களித்திருக்கிறார்களாம். மேலும், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்த பின் மீண்டும் சர்வே எடுத்தபோது, 71% வாக்குகள் தவெகவுக்கு வந்திருக்கிறதாம். காங்., கூட்டணி நிலைப்பாட்டில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா?

error: Content is protected !!