News November 18, 2025
காங்., திமுகவை மூழ்கடிக்கும்: தமிழிசை

பிஹார் தேர்தலுக்கு பிறகு பல பாடங்களை கற்றிருக்கிறோம் என CM ஸ்டாலின் கூறியிருந்தார். இதனை மேற்கோள் காட்டி பேசிய தமிழிசை, காங்கிரஸுடன் இருந்தால் திமுகவையும் இழுத்து மூழ்கடித்து விடுவார்கள் எனும் பாடத்தையும் CM கற்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அத்துடன், வாக்குகளை திருடியதாக பொய் கூறிய ராகுல் காந்தியை பிஹார் மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
PAK-ன் 255 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்கள், ஆயுதங்களை கடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட, இப்படியொரு குற்றச்சாட்டில் விஷால் பச்சார் என்பவரை <<18300589>>NIA <<>>கைது செய்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும், பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக BSF தெரிவித்துள்ளது. மேலும், தற்போது மூடுபனி காலம் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

பிஹாரில் எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்?

பிஹாரில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் அதிகளவில் பாஜகவினர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவை சேர்ந்த 16 பேருக்கு, JDU-வை சேர்ந்த 14 பேருக்கு, சிராஜ் பாஸ்வான் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய கூட்டணிகளான அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.