News April 24, 2024
நாளை கள்ளழகர் திருவிழா – ஐகோர்ட் அதிரடி உத்தரவு

“மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடு திருப்தி அளிக்கிறது. விஐபிக்களுக்கு வழங்கப்பட்ட 2400 பாஸில், ஒரு பாஸ்க்கு ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடுதலாக யாரையும் அனுமதிக்க கூடாது. பாரம்பரிய முறையில் தோல் அல்லது கை பம்புகள் மூலம் மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும், மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் ” என மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
மதுரையில் இன்று இரவு ரோந்து போலீஸ் எண்கள்!

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (13.01.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
மதுரையில் நவீன மெய்நிகர் ஆய்வகம் உள்ள அரசுப் பள்ளி

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளியில் ஹெச்.டி.எப்.சி. வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்ட மெய்நிகர் ஆய்வகத்தை (virtual Lab) மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், MLA பூமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினர், அதிகாரிகள் பங்கேற்றனர். *ஷேர் பண்ணுங்க.
News January 13, 2026
மதுரை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)


